Saturday, August 9, 2014

6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவன், ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம்


6 ஆம் வகுப்போடு பள்ளிப் படிப்பை நிறுத்திய மாணவன், ஐ.ஏ.எஸ். தேர்வில் முதலிடம் ............
.
Dyselexia (கற்றல் குறைபாடு) காரணமாக படிப்பு சரியாக ஏறாததால் ஆறாம் வகுப்பிலிருந்து பள்ளிப் படிப்பை நிறுத்திய நந்தகுமார் அதற்கு பிறகு, லாட்டரி விற்பது, டூ-வீலர் மெக்கானிக் ஷாப்பில் எடுபிடி வேலை, அடுத்து ஜெராக்ஸ் கடை, பின்னர் டி.வி.- ரேடியோ மெக்கானிக், சவுண்ட் சர்வீஸ் உதவியாளர், அதற்கு பிறகு ஐஸ்-க்ரீம் விற்பனையாளர் என்று பல்வேறு வேலைகள் பார்த்தார்.
.
இடையே 8 ஆம் வகுப்பு, 10 ஆம் வகுப்பு, மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை ப்ரைவேட்டாக எழுதி பாஸ் ஆனார். பின்னர் பல போராட்டங்களுக்கு பின்னர் கல்லூரியில் சேர்ந்தார். பின்னர் பல்வேறு போட்டி தேர்வுகளை எழுதினார்.
.
இறுதியில் மத்திய அரசின் UPSC தேர்வு எழுதி ஐ.ஏ.எஸ். தேர்வில் அகில இந்திய அளவில் முதல் மாணவனாக தேர்ச்சி பெற்றார்.
.
தற்போது சென்னை வருமான வரித் துறை அலுவலகத்தில் துணை ஆணையாளராக பணிபுரிகிறார்.
.
நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் சரி… எப்படி இருந்தாலும் சரி… எவ்வளவு கீழே இருந்தாலும் சரி… உங்களுக்கு இன்னும் வாய்ப்பிருக்கிறது. மிகப் பெரிய வாய்ப்பு.;
.
“எங்கே இருக்கிறீர்கள் என்பது முக்கியமல்ல என்னவாக நினைக்கிறீர்கள் என்பது தான் முக்கியம்"

No comments:

Post a Comment

Followers

J.ELANGOVAN.TRICHY