Showing posts with label PENCIL DRAWING - Rabindranath Tagore. Show all posts
Showing posts with label PENCIL DRAWING - Rabindranath Tagore. Show all posts

Wednesday, June 7, 2017

PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் - 09-05-2017

                     Rabindranath Tagore


PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore




காலவரிசை

1861: கல்கத்தாவில் ஒரு பணக்கார பிராமண குடும்பத்தில் மே 7, 1861 அன்று பிறந்தார்.

1873: பூணூல் சடங்கிற்குப் பின், 14 பிப்ரவரி 1873 ஆம் ஆண்டு தகப்பனாருடன் கல்கத்தாவை விட்டுப் புறப்பட்டார்.

1874: அவரின் கவிதையான ‘அபிலாஷ்’ (ஆசை), தட்டோபோதினி என்ற ஒரு பத்திரிகையில் அநாமதேயமாக வெளியிடப்பட்டது.

1875: அவரது தாயார் சாரதா தேவி காலமானார்.

1878: முதல் கவிதைப் புத்தகமான ‘கபி கஹினி’ (ஒரு கவிஞர் கதை)வெளியிடப்பட்டது.

1878: சட்டம் பயில்வதற்காக கடல்வழியாக இங்கிலாந்து சென்றார்

1880: கவிதைகளை ஆராய்வதில் ஆர்வம் காட்டியதால், பட்டம் பெறாமலேயே வங்கத்திற்குத் திரும்பிவிட்டார்.

1883: டிசம்பர் 9ஆம் தேதி, 1883ஆம் ஆண்டில் மிருனாலி தேவி ராய்சௌத்ரி என்ற 10 வயதுப் பெண்ணை மணந்தார்

1884: ‘கோரி-ஓ-கமல்’ (ஷார்ப் மற்றும் பிளாட்) என்ற கவிதைத் தொகுப்பை எழுதினார். 1890:தனது குடும்ப எஸ்டேட்டைப் பார்த்துக்கொள்ள சிலைதஹாவிற்கு (இப்போது வங்காளத்தில் உள்ளது) சென்றார்.

1893–1900:  தாகூர் அவர்கள் ஏழு கவிதைத் தொகுதிகளான ‘சொனார் தொரி’ (கோல்டன் படகு) மற்றும் ‘கனிகா’ போன்றவற்றை எழுதியுள்ளார்.

1901: பங்கதர்ஷன் என்ற இதழின் ஆசிரியரானார்.

1902: அவரது மனைவி மிருணாளினி இறந்தார்.

1909:‘கீதாஞ்சலியை’ எழுதத் தொடங்கினார்.

1912: இரண்டாவது முறையாக ஐரோப்பா சென்றார்.

1912: லண்டனில் உள்ள இந்திய சமூகத்தின் ஒரு வரையறுக்கப்பட்ட பதிப்பில் கீதாஞ்சலி வெளியிடப்பட்டது.

1913: கீதாஞ்சலிக்கு, இலக்கியத்துக்கான ‘நோபல் பரிசு’ வழங்கப்பட்டது.

1915:ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர், ‘சர்’ என்னும் வீரப்பட்டம் வழங்கினார்.

1919: ஜாலியன்வாலா பாக் படுகொலையைத் தொடர்ந்து, ஆங்கிலேய ஜார்ஜ் மன்னர்‘சர்’ என்னும் வீரப்பட்டத்தைத் துறந்தார்.

1916 –1934: சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.

1921:விஸ்வபாரதி பல்கலைக்கழகத்தை நிறுவினார்.

1940:சாந்திநிகேதனிலுள்ள ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகத்தில் ‘இலக்கிய முனைவர் பட்டம்’ வழங்கப்பட்டது.

1941: கல்கத்தாவிலுள்ள தனது மூதாதையர் வீட்டில் ஆகஸ்ட் 7, 1941 அன்று காலமானார்.

Saturday, March 11, 2017

PENCIL DRAWING - Rabindranath Tagore


                  PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -09-03-2017
                          Rabindranath Tagore



PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore



PENCIL DRAWING - Rabindranath Tagore
PENCIL DRAWING - Rabindranath Tagore

தமிழில் தேசியகீதம் 
தேசிய கீதம், கீதாஞ்சலி, சாந்தி நிகேதன், வங்காளம் ரபீந்திரநாத் தாகூர் நினைவில் கொள்ள இப்படி எத்தனை எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. சிறுவயதில் தாகூருக்கு வகுப்பறைகள் பிடிக்கவில்லை. வகுப்பறையின் ஜன்னல் வழியே தெரியும் மேகமும் பறவைகளும், செடி, கொடி, மரங்களும் அவருக்குக் கவிதைகளாகத் தெரிந்தன. தாகூர் அடையாளப்படுத்தும் விஷயமாக கவிதை மாறிப்போனது. மென்மையான மனிதர் தாகூர்.
ஆனால் வங்கப்பிரிவினையை எதிர்த்து அவர் நடத்தியதோ அழுத்தமான போராட்டங்கள். தாகூரின் வாழ்க்கையை வாசிக்கும் போது, ஒரு நல்ல கவிதையை வாசிக்கும் அனுபவம் கிடைக்கும்.
இனிய தமிழில் இந்திய தேசிய கீதம்...
வங்க மொழி...
ஜன கண மன அதிநாயக ஜெய ஹே
பாரத பாக்ய விதாதா.
பஞ்சாப சிந்து குஜராத்த மராட்டா
திராவிட உத்கல வங்கா.
விந்திய இமாச்சல யமுனா கங்கா
உச்சல ஜலதி தரங்கா.
தவ ஷுப நாமே ஜாகே,
தவ ஷுப ஆஷிஷ மாகே,
காஹே தவ ஜெய காதா.
ஜன கண மங்கள தாயக ஜெயஹே
பாரத பாக்ய விதாதா.
ஜெய ஹே, ஜெய ஹே, ஜெய ஹே,
ஜெய ஜெய ஜெய, ஜெய ஹே.
இதன் நேரடி தமிழாக்கம்...
மக்கள் பெருங்கூட்டத்தின் மனத்தில் ஆட்சி செய்பவள் நீ தான். வெற்றி உனக்கே !
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
பஞ்சாப் மாகாணம், சிந்து நதிப்பிரதேசம், குஜராத் மாநிலம், மராட்டிய மாநிலம்,
திராவிட பீடபூமி, உத்கலமாகிய ஒரிஸ்ஸா மாநிலம், வங்காள (பங்கா) தேசம் உன்னுடையது ..
விந்திய இமாசல யமுனா கங்கா
மூன்று திசைகளிலும் உன்னைச் சூழ்ந்திருக்கும் மாக்கடல்கள் உன் புகழை தங்கள் அலைக் கரங்களால் எப்போதும் பாடிக் கொண்டிருக்கின்றன..
உனது மங்கலகரமான திருநாமத்தை எப்போதும் நாங்கள் பாடிப் போற்றிக் கொண்டிருக்கிறோம்.,
உனது மங்கலகரமான ஆசிகளை வேண்டி நிற்கின்றோம்.,
உன்னுடைய மாபெரும் வெற்றியை வேண்டியே நாங்கள் பாடிக்கொண்டிருக்கிறோம்..
இந்திய மக்களின் மங்கலங்களை அள்ளித் தருபவள் நீ. வெற்றி உனக்கே!
இந்தியத் திருநாட்டின் பாக்கியங்களைத் தருபவள் நீ..
வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே! வெற்றி உனக்கே!
வெற்றி! வெற்றி!! வெற்றி!!! வெற்றி உனக்கே!.
ஆனால்... இதை அப்படியே உபயோகித்தால் தேசிய கீதத்தின் ராகம் வரவில்லை என்பதால் சொல்லாடல்களை சுருக்கி...
தேசிய கீதத்தின் உண்மையான பொருள் படும்படி அமைத்து...
மக்களின் மனங்களில் ஆள்பவள் நீயே
இந்திய வளங்களின் அரசி
பஞ்சாப் சிந்து குஜராத் மராட்டியம்
திராவிடம் ஒடிசா வங்கம்
விந்திய இமயம் யமுனா கங்கை
முக்கடல் நின் புகழ் பாடும்
உன்புகழ் பாடி மகிழ்வோம்
உன் ஆசி வேண்டி நிற்போம்
உன் வெற்றி தனையே புகழ்வோம்
இந்திய வெற்றியின் தாரகை நீயே...
இந்திய வளங்களின் அரசி
வெற்றி... வெற்றி... வெற்றி...
உனக்கே என்றும் வெற்றி..

தமிழாசிரியர் உயர்திரு. முத்துநிலவன் அவர்கள் அவரின் வலைபூ பக்கத்தில் http://valarumkavithai.blogspot.in/2013/07/blog-post_29

Followers

J.ELANGOVAN.TRICHY