Showing posts with label PENCIL DRAWING -BETTA FISH. Show all posts
Showing posts with label PENCIL DRAWING -BETTA FISH. Show all posts

Saturday, March 11, 2017

PENCIL DRAWING -BETTA FISH

                          PENCIL DRAWING

தினம் ஒரு ஓவியம் வரைவோம் -03-003-2017
                                  BETTA FISH

                     ''சியாம் சண்டை''மீன்
PENCIL DRAWING -BETTA FISH
PENCIL DRAWING -BETTA FISH


  ''சியாம் சண்டை'' மீன் (betta fish).
தென்கிழக்காசியாவை தாயகமாகக் கொண்டது.
மலேசியா, தாய்லாந்து,இந்தோனிசியா மற்றும் வியாட்நாம் போன்ற நாட்டுகளின் இவ்வகை மீன்களை அதிகம் காணலாம்.
இயல்பாக ''சியாம் சண்டை மீன்களை வயல்வெளி மற்றும் குளங்கள் என நன்னீர் பகுதிகளில் வாழக்கூடியது.
ஆனால் அதிகளவில் இம்மீன்கள் அலங்கார மீன்களாக தொட்டிக்குள் வைத்தே வளர்க்கப்படுகின்றன.
வெறும் 1 அங்குலத்திற்கும் குறைவாக வளரக்கூடிய இவ்வகை மீன்களை உணவுக்காக பயன்படுத்த முடியாது. ஆனாலும் அனைவராலும் இம்மீன்கள் விரும்பப்படுவதர்கான காரணம் இவைகளின் அழகுதான்.
பெண் மீன்களை விட ஆன் மீன்களே அழகாக இருக்கும். பெரும்பாலும் பெண் மீன்களுக்கு பிடரிகள் இருப்பதில்லை. அதனால் அழகிய பிடரிகள் கொண்ட ஆன் மீன்களையே பலரும் வளர்க்க விரும்புகின்றார்கள்.
ஒரே தொட்டிக்குள் இரண்டு ''சியாம் சண்டை'' மீன்களை வளர்க்க முடியாது. அப்படி ஒரே தொட்டியில் இரண்டு மீன்களை விட்டால் இரண்டும் மூர்க்கத்தமாக ஒருவருக்கொருவர் கொள்ளும். இறுதில் பலாமான மீன் பலவீனமான மீனை கொன்று விடும். இம்மீன்களின் இப்போர் குணத்தால்தான் இவைகள் சண்டை மீன் என்று அழைக்கப்படுகின்றது.
ஒரு தொட்டியில் ஆண்,பெண் என்று விட்டாலும் ஆண் மீன் பெண் மீனை கொன்று விடும். ஆண் மீன் அவ்வளவு போர்குணம் கொண்டது. எனவே இம்மீன்களை வளர்ப்பவர்கள் ஆண் மீன்களை தனியாகத்தான் வளர்ப்பார்கள். ஆனால் பெண் மீன்களோ ஆண் மீன்களைப் போன்று மூர்க்கத்தனம் கொண்ட்டதல்ல. ஒரு தொட்டியில் நான்கு அல்லது ஐந்து பெண் மீன்களை வளர்க்க முடியும்.
''சியாம் சண்டை'' மீன்களின் பாலியல் (sex ) முறை என்பது சற்று சுவாரசியமானது.
பொதுவாக, ஆண் சண்டை மீன்களுக்கு பாலியல் உணர்வு ஏற்படும் பொழுது தண்ணீரின் மேற்பரப்பில் எச்சில் குமிழ்களை மிதக்க விடும். அதை வைத்து பாராமரிப்பாளர்கள் இன சேர்க்கைக்காக பெண் மீனை ஆண் மீனின் தொட்டியில் விடுவார்கள்.
இன சேர்க்கை காலத்தில் மட்டும் ஆண் சண்டை மீன்கள் பெண் மீன்களை தாக்காது. இன சேர்க்கை முடிந்துவுடன் பெண் மீன் முட்டையிடும். பெண் மீனை முட்டைகளை இட்டவுடன் அந்த தொட்டியிலிருந்து எடுத்துவிட வேண்டும். இல்லையென்றால் முட்டைகளை பெண் மீன் தின்றுவிடும்.
''சியாம் சண்டை'' மீன் இனத்தில் முட்டைகளை பாதுக்காக்கும் பொறுப்பு ஆண்களுடையது. முட்டைகள் பொறியும் வரை ஆண் மீன்களே முட்டைகளைப் பாதுக்காக்கும். முட்டைகள் பொறிந்தவுடன் குஞ்சிகளிடமிருந்து ஆண் மீனையும் பிரித்திட வேண்டும். இல்லையென்றால் தந்தையே குஞ்சிகளை தின்று விடும்.
குஞ்சிகளாக இருக்கும் பொழுது, சியாம் சண்டை மீன்களை ஒரே தொட்டியில் வளர்க்கலாம். சற்று வளர்ந்தவுடன் ஆண் குஞ்சிகளை தனித்தனி தொட்டிகளுக்கு மாற்றிவிடுவது நல்லது.
இன்று பல நாட்டுகளில் மக்கள் சியாம் சண்டை மீனை செல்லப் பிராணியாக வளர்க்கின்றார்கள். அதே நேரத்தில் தொடர்ந்து சியாம் சண்டை மீன்கள் பல வர்ணங்களிலும் வகைகளிலும் உருவாக்கப்படுகின்றன.
குறைந்த செலவில் ஒரு செல்லப்பிராணியை நீங்கள் வளர்க்க விரும்பிளால் ''சியாம் சண்டை'' மீன்களே ஒரு சிறந்த தேர்வு.


Followers

J.ELANGOVAN.TRICHY